2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்த நியமனத்துக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.செல்வராஜா

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி, இம்மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வயதெல்லையும் 30இல் இருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க தவறியவர்களும் வயதெல்லை பிரச்சினைக்குரியவர்களும் இவ்வாய்ப்பைத் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவருமான அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'சுமார் 7,000 திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவிருக்கும் இவ்வேளையில், மலையகத்தில் படித்த இளைஞர், யுவதிகளை அதிகளவில் உள்வாங்கப்பட வேண்டுமென்ற இலக்கோடு எமது கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் இவ்விடயம் தொடர்;பாக அமைச்சரவையிலும் அதிக அழுத்தத்தை பிரயோகிக்கவுள்ளார். 

தற்போது நாட்டில் சுமார் 19 இலட்சம் பேர், சமுர்த்தி  பயனாளிகளாக உள்ளனர். இதில், மலையக மக்களோ மூவாயிரத்துக்கும் குறைவானவர்களாகவே பயனாளிகளாகவுள்ளனர். எனவே, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் எம் சமூகத்திலிருந்து அதிகளவில் நியமனம் பெரும் பட்சத்தில், சமுர்த்தி நிவாரணத்தை பெறுபவர்களின் எண்ணிக்கை உணர்த்துவதற்கு ஏதுவாக அமையும். 

கீழ் கண்ட தகமைகளை உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கல்வித்தகமை: க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தமிழ், கணிதம் அடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். க.பொ.த உயர்தர பரீட்;சையில் 1 பாடத்திலாவது சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

வயதெல்லை : விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 18 வயதுக்கும் குறையாமலும் 35 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

பரீட்சைக் கட்டணம் : ரூபாய் 500 (பணத்தை திவிநெகும சமுர்த்தி வங்கியில் செலுத்தலாம்)

மேற்படி பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவங்களை - பதிவாளர், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், கங்கொடவில, நுகேகொட எனும் முகவரிக்கு, எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பம் அனுப்பப்படும் கடிதவுறையின் இடதுபக்க மேல் மூலையில், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2016 என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பப்படிவங்களை மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் ஹட்டன் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய  மாவட்ட காரியாலயங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விவரங்களுக்கு, எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தோ அல்லது 051-4920300/ 051-4020302/  051-2222793/  052-2223052/ 055-2229838/ 055-4928206/ 055-2231526 எனும் தொலைபேசி இலக்கங்களுடன்  தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .