2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கில்; காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான மாகாண மட்ட பயிற்சி இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை புளு சினமன் உல்லாச விடுதியில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிர்வாகத்தில் கடமையாற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உட்பட சுமார் 45 அதிகாரிகள்  கலந்து கொண்டுள்ளதாக ஜனதாக்ஸன் நிறுவனத்தின் பயிற்சி இணைப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

உயிர்வாயு தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய, மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் ஓரங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெறுகிறது.

ஜனதாக்ஸன் நிறுவனத்தின் சமூக, விஞ்ஞானப் பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் ஜானக ஹேமதிலக தெரிவிக்கையில், 'திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் உயிர்வாயுத் தொழில்நுட்பம் அதிகளவான நன்மைகளை ஈட்டித் தரக்கூடியது.

உயிர்வாயு தொழில்நுட்பத்தின் மூலம் மீள்சுழற்சி முறையில் இயற்கைக்குக் கேடு விளைவிக்காத விதத்தில் மின்சாரம், இயற்கை எரிவாயு, பசளை, நீர் என்பனவற்றையும் சுழற்சி முறையில் தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருக்கலாம்.
இதனால் நாம் இயற்கைச் சூழலை கேடு விளைவிக்காத விதத்தில் பேணிப் பாதுகாப்பதோடு எமது பொருளாதாரத்தையும் கூடியளவு மீதப்படுத்திக் கொள்ளவும் முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X