2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நான் விளையாடியவர்களில் ஸ்டீவ் வோவே சுயநலவாதி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 09 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வோ, மிகவும் சுயநலவாதியான கிரிக்கெட் வீரர் என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோண் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டே, இக்கருத்துகளை ஷேன் வோண் வெளியிட்டார்.

'ஸ்டீவ் வோவை நான் விரும்பாமைக்கு, பல காரணங்கள் இருக்கின்றன. பல காரணங்கள். ஏனெனனில், நான் இணைந்து விளையாடிய வீரர்களில், அதிக சுயநலவாதியான வீரர், அவரே" என, வோண் தெரிவித்தார்.

ஸ்டீவ் வோ மீதான அவரது வெறுப்புக்கு, 1999ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து தான் விலக்கப்பட்டமையை, காரணமாக ஷேன் வோண் வெளியிட்டார். அதற்கு முன்னைய போட்டியில், பிரையன் லாரா சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியதோடு, தான் சிறப்பாகப் பந்துவீசியிருக்கவில்லை எனத் தெரிவித்த வோண், ஆனால், அப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு, தான் பலியாடு ஆக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்போதைய காலத்தில், அணித்தலைவர் (வோ), உபதலைவர் (ஷேன் வோண்), பயிற்றுநர் (ஜெப் மார்ஷ்) ஆகியோர் அணியைத் தெரிவு செய்பவர்கள் என்ற போதிலும், தன்னை அணியிலிருந்து நீக்கும் முடிவை, ஸ்டீவ் வோ எடுத்ததாகவும், அணித்தலைவராகத் தானே எடுப்பதாக வோ குறிப்பிட்டதாகவும், வோண் தெரிவித்தார்.

அதனைத் தவிர, வேறு பல காரணங்களுக்காகவும் ஸ்டீவ் வோவை தனக்குப் பிடிக்காது என, வோண் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X