தடுப்புக்கைதிகளை படுகொலை செய்தது சிரியா
09-02-2016 09:06 AM
Comments - 0       Views - 10

சிரியாவின் சிவில் யுத்தத்தில், சில ஆயிரக்கணக்கான தடுப்புக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டோ அல்லது அடித்துக் கொல்லப்பட்டோ அல்லது இறக்க விடப்பட்டதாக சர்வதேச விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளமையானது சர்வதேச சட்டத்தின் கீழ், நிர்மூலமாக்குவதாக கருதப்படுகிறது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் அரசாங்கத்தினால் தடுப்புக்கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகளினால் ஆதரவளிக்கப்பட்ட ஆணைக்குழு, விசாரணையை மேற்கொண்டு, 25 பக்க அறிக்கையை, கடந்த திங்கட்கிழமை (07) கையளித்துள்ளது.

மேற்படி அறிக்கையானது, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 621 நேர்காணல்களிலிருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்புக்கைதிகளின் கொலைகள் பற்றி மேலும் விவரமாக அறிக்கையளிப்பதற்கு, தம்மிடையே ஆதாரங்கள், போதுமானவையாக இல்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி அறிக்கையானது, மேற்கூறப்பட்ட குற்றங்களுக்கு காரணமான, பெயர் குறிப்பிடப்படாத தனிநபர்கள் அல்லது குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. தவிர, குற்றவியல் விசாரணைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் மேற்கொள்ளமுடியாமை குறித்தும் விசாரணையாளர்கள் சாடியுள்ளனர்.

பாரியளவிலான தடுப்புக் கைதிகளின் மரணங்களானது, சிரிய அரசாங்கமே, மனிதத்துக்கு எதிராக குற்றம் புரிந்து நிர்மூலமாக்கியது என மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் போலோ பின்ஹெய்ரோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா முன்னணி போன்ற ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் பற்றியும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், ஐ.எஸ்.ஐ.எஸ்-இனால் உபயோகிக்கப்பட்ட தற்காலிக தடுப்பு நிலையங்களில், சிறுவர்களை படுகொலை செய்தமை பற்றியும் கூறப்பட்டுள்ளது

"தடுப்புக்கைதிகளை படுகொலை செய்தது சிரியா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty