ஜெர்மனியும் துருக்கியும் அகதிகள் நெருக்கடியை குறைக்க இணக்கம்
09-02-2016 12:10 PM
Comments - 0       Views - 9

சிரிய அகதிகள் நெருக்கடியை முகங்கொடுப்பதற்கான ஒரு தொகுதி நடவடிக்கைகளுக்கு துருக்கியும் ஜெர்மனியும் இணங்கியுள்ளன. இதில், சிரியாவின் பெரிய நகரான அலெப்போவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பான, இணைந்த இராஜதந்திர நடவடிக்கையும் உள்ளடங்குகிறது.

இது தவிர, சட்டவிரோதமாக இடம்பெறும் குடியேற்றத்தை நிறுத்தவது தொடர்பிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜெர்மனி, துருக்கி அதிகாரிகள், கடந்த திங்கட்கிழமை (08) துருக்கி தலைநகர் அங்காரவில் அழைத்துள்ளனர்.

ஐரோப்பாவுக்கு படையெடுத்துவரும் அகதிகளின் எண்ணிக்கையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துருக்கி தலைநகர் அங்காரவிலுள்ள ஜெர்மன் சான்சிலர் அஞ்ஜெலா மேர்க்கல், துருக்கியப் பிரதமர் அஹ்மெட் தவுடொக்லுவை சந்தித்தபின்னர் கருத்து தெரிவிக்கையில், சிரியாவில், ரஷ்ய குண்டுத்தாக்குதலினால் ஏற்படும் துன்பத்தினால் அதிர்ச்சியடைந்து மட்டுமல்லாமல் திகிலடைவதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், ரஷ்யாவினால் ஆதவளிக்கப்பட்ட சிரிய அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல், அலெப்போவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், துருக்கியுடனான சிரிய எல்லையில் ஆயிரக்கணக்கானவர்கள் தவித்தவண்ணமுள்ளனர்.

"ஜெர்மனியும் துருக்கியும் அகதிகள் நெருக்கடியை குறைக்க இணக்கம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty