2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஐக்கிய அரபு அமீரகத்தில் மகிழ்ச்சிக்கான அமைச்சு

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 09 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில், மகிழ்ச்சிக்கான அமைச்சொன்று உருவாக்கப்படவுள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் மொஹமட் பின் றஷிட் அல் முக்தொம், இந்த அறிவிப்பை விடுத்தார். இவரே, இந்நாட்டின் ஆட்சியாளருமாவார்.

ஐக்கிய அரபு அமீரகத்தால் நடாத்தப்பட்டுவரும் உலக அரசாங்க உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், தனது ட்விற்றர் தளத்தில் கருத்துத் தெரிவித்த போதே, இந்த அறிவிப்பை அவர் விடுத்தார்.

'மகிழ்ச்சிக்கான இராஜாங்க அமைச்சர் என புதிய அமைச்சு, சமூக நலனையும் திருப்தியடைதலையும் நோக்கிக் கொண்டுசெல்லும் அரசாங்கக் கொள்கைக்காக உருவாக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

இது தவிர, சில அமைச்சுகள் ஒன்றாக இணைக்கப்படுமெனத் தெரிவித்த அவர், சகிப்புத் தன்மைக்கான அமைச்சொன்றும் உருவாக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள், எப்போது உருவாக்கப்படுமென்ற கால எல்லையை, பிரதமர் வழங்கியிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .