கடந்த 2 வாரங்களில் சிரியாவில் கொத்தணிக் குண்டுகள் பயன்பாடு
09-02-2016 03:13 PM
Comments - 0       Views - 11

ரஷ்யாவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் படைகள், கடந்த 2 வாரங்களில், கொத்தணிக் (கிளஸ்டர்) குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. அலெப்போ மாகாணத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இ;வை பயன்படுத்தப்பட்டதாக, அக்கண்காணிப்பகம் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி 26ஆம் திகதியிலிருந்து, அலெப்போ, டமாஸ்கஸ், இட்லிப், ஹொம்ஸ், ஹமா மாகாணங்களில், ஆகக்குறைந்தது 14 தாக்குதல்களில், கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆறு பெண்கள், ஒன்பது சிறுவர்கள் உள்ளடங்கலாக, ஆகக்குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையை விட, குண்டுத் தாக்குதல்களும் உயிரிழப்புகளும் அதிகமாகக் காணப்படுமென, கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

உள்;ர்க் கண்காணிப்பாளர்கள், ஆகக்குறைந்தது எட்டு அதிகமான தாக்குதல்களைப் பற்றி ஆவணப்படுத்தியுள்ளனரெனத் தெரிவித்துள்ள கண்காணிப்பகம், அவற்றைத் தம்மால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட முடியவில்லை எனவும் தெரிவிக்கிறது.

குண்டு வீசப்பட்ட பின்னர், சிறிய சிறிய துகள்களாக மாறி, அதிக இடத்துக்குப் பரவும் இயல்பை கொத்தணிக் குண்டுகள் கொண்டிருப்பதன் காரணமாக, அவை மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுவதோடு, 2008ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் மூலமாகத் தடை செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்கதாக, ஜெனீவாவில் இடம்பெற்று, முறிவடைந்த பேச்சுகள் இடம்பெற்ற காலத்திலேயே, இத்தாக்குதல்களில் பெரும்பாலானவை இடம்பெற்றன.

 

 

 

"கடந்த 2 வாரங்களில் சிரியாவில் கொத்தணிக் குண்டுகள் பயன்பாடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty