2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அநியாய விலைக்கு நெல் கொள்வனவு

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நியாய விலையை நிர்ணயித்துள்ள போதும், வடக்கு விவசாயிகளிடமிருந்து அநியாய விலைக்கு தென்னிலங்கை வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

ஒரு கிலோ நெல்லின் கொள்முதல் விலை 50 ரூபாய் என அரசாங்கம் கூறியுள்ள போதும், வன்னியில் 75 கிலோகிராம் எடையுள்ள ஒரு மூடை நெல்லை 1,500 ரூபாய்க்கு தென்னிலங்கை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

விவசாய அமைச்சின் கீழுள்ள கூட்;டுறவுச் சங்கங்கள் மூலம் உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்முதல் செய்யலாம். அதற்கான நிதி கூட்டுறவுச் சங்கங்களில் இல்லையென்பது தெரியும். மாவட்டச் செயலாளர் மூலம் நிதியைப் பெற்று நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும்.

எனவே, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதியிடம் நிதி ஒதுக்குவது தொடர்பில் கதைக்க வேண்டும் என்றார்.

'நெல்லை சேமிக்க முடியாத விவசாயிகள் அதனை, அநியாய விலைக்கு விற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

மேலும், முன்னர் நெல் கொள்வனவுக்காக கூட்டுறவுச் சங்கங்கள் பெற்றுக்கொண்ட கடன்கள் இன்னமும் மீளளிக்கப்படாத நிலை காணப்படுகின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .