2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இடமாற்றப்படாது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகக் காரியாலயத்தை இடமாற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதுடன்,  இக்காரியாலயம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்குமென பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லையெனவும் அவர் கூறினார்.

கல்முனையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகக் காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்றுவது சம்பந்தமான கலந்துரையாடல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட குழுவினருக்கும்; வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரலவுக்குமிடையில் செவ்வாய்க்கிழமை (09) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள அவரது அமைச்சுக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இது தொடர்பில் பிரதியமைச்சர் மேலும், தெரிவிக்கையில், 'கல்முனையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை இடமாற்றுவது சம்பந்தமாக மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்; கலந்தாலோசிக்காமல், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதையிட்டு மு.கா. பிரதிநிதிகள் கண்டனத்தை தெரிவித்ததுடன், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரப்பட்டது.  

மேலும், இக்காரியாலயத்தில் நாளாந்தம் அதிகளவானோர் பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர். இதனால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு இலங்கையில் கூடுதல் வருமானம் சம்பாதிக்கின்ற, கூடுதலான பயிற்சியாளர்களைக் கொண்டு இயங்குகின்ற காரியாலயங்களில் ஒன்றாக கல்முனைக் காரியாலயம் உள்ளது.  இக்காரியாலயத்தை இடமாற்றுவதன் மூலம் இதில் பயிற்சி பெறுகின்ற இளைஞர்;களும், யுவதிகளும் பாதிக்கப்படுவரென சுட்டிக்காட்டப்பட்டது' என்றார்.  

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தலதா அத்துகொரல, கல்முனையிலுள்ள  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகக் காரியாலயத்தை வேறிடத்துக்கு  இடமாற்றுவதை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.

இவ்வாறிருக்க, தற்போது இயங்குகின்ற இக்காரியாலய வாடகைச் செலவீனத்தால் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மு.கா. குழுவினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, தற்போது இயங்குகின்ற கட்டடத்தை மாற்றி கல்முனையில் வேறொரு  கட்டடத்தில் இக்காரியாலயத்தை  மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X