2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'உடல் ஆரோக்கியம் இருக்கும் பட்சத்தில் உள்ளம் ஆரோக்கியமடையும்'

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

உடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் உள்ளம் ஆரோக்கியமாக இருக்கும். அப்போதுதான் கல்வியை சீராகப் பெற்றுக்கொள்ளமுடியும் என சம்மாந்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட சொறிக் கல்முனை கொலிக்றோஸ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதற்கு கட்டாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி இன்றியமையாததாகும். அதுமட்டுமல்ல இவ்வாறான விளையாட்டுக்கள் மூலம் வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒவ்வொரு பிள்ளையிடமும் ஏற்படும். அப்போதுதான் அப்பிள்ளைகள் எதிர்காலத்தில் பல சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றியடையும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

இன்று இப்பாடசாலையில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளைப் பார்கின்றபோது, சரியான முறையில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்படுவது  இப்பாடசாலையின் அதிபரின் வழி நடத்தலும் ஆசிரியர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

அதுபோன்று விளையாட்டு விழாவில் பெற்றோர்கள் உற்சாகமாக தங்கள் பிள்ளைகளுக்கு உதவிக் கொண்டிருப்பதையிட்டு சந்தோசமடைகின்றேன்.

இது போன்று பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும் பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்படும் பட்சத்தில் நாட்டில் நல்லதோர் தலைவர்களை உருவாக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .