2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமெரிக்கத் தூதுவருக்கு துருக்கி அழைப்பு

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் குர்திஷ் ஜனநாயக ஒன்றியக் கட்சியை, பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா கருதவில்லையென, ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளரொருவர் தெரிவித்த கருத்துத் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் ஜோன் பேஸ், கடந்த செவ்வாய்க்கிழமை, துருக்கிய வெளிநாட்டு அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், அதன்போது அவரிடம் விளக்கம் கோரப்பட்டதோடு, அமெரிக்காவின் இந்நிலை தொடர்பாகக் கடுமையான கரிசனம் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

சிரியாவின் குர்திஷ் ஜனநாயக ஒன்றியக் கட்சியை, தென் துருக்கியில் சுயாட்சிக்காகப் போராடிவரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் சகோதர இயக்கமாக துருக்கி கருதுவதே, துருக்கியின் இந்த எதிர்வினைக்கான காரணமாகும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கெதிரான போராட்டத்தில் பங்களிப்பு வழங்குவதற்காக, சிரியாவின் குர்திஷ் ஜனநாயக ஒன்றியக் கட்சியை எதிரிகளில் ஒன்றாகப் பார்க்க விரும்பவில்லை என்பதே காரணமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .