2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரணத்துக்கு அஞ்சேன்

George   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எதிர்க்கட்சிக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து எனக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது' என சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இணைந்த எதிரணியை, சுயாதீனமாக நாடாளுமன்றத்துக்குள் செயற்படுவதற்கு அனுமதியளிப்பதற்கு இடமளிப்பது தொடர்பில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையின் பின்னரே, இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணைந்த எதிரணியாகக் கூறப்படும் குழுவினர் விடுக்கும் கோரிக்கைகள் தொடர்பில் நான் தேடிப்பார்த்தேன், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் உலக நாடுகளின் நடைமுறைகளையும் ஆராய்ந்தேன்.

இந்த நாடாளுமன்றத்தில், அங்கிகரிக்கப்பட்ட 6 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதிலொன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும். அக்கட்சிக்கு, நாடாளுமன்ற குழுத்தலைவர் இருகின்றார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள், புதிய குழுவொன்று இருக்கமுடியாது. 

உங்களை தனித்து இயங்குவதற்கு இடமளிக்கவேண்டுமா? இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே தீர்மானிக்கவேண்டும்.

இந்த விவகாரத்தில், எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தால் பரவாயில்லை. நாடாளுமன்ற அதிகாரிகளை மிரட்டவேண்டாம். நான், மரணத்துக்கு அஞ்சேன். என்னைத் தூற்றுங்கள் ஆனால், அவையின் கௌரவத்தைப் பாதுகாத்துகொள்ளுங்கள் என்றார்.

இந்நிலையில், எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .