2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 11

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1531: இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவராக 8ஆம் ஹென்றி மன்னன் அங்கீகரிக்கப்பட்டார்.

1752: அமெரிக்காவின் முதல் வைத்தியசாலையான பென்சில்வேனியா வைத்தியசாலை, பெஞ்சமின் பிராங்களினால் திறக்கப்பட்டது.

1971: சர்வதேச கடல்பரப்பில் அணுவாயுதங்களை வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.

1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லூ கொமெய்னியின் ஆதரவாளர்களிடம் மன்னராட்சி வீழ்ச்சியடைந்தது.

1975: பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆந்நாட்டின் அரசியல் கட்சியொன்றின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவராவார்.

1990: 27 வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டிருந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலையானார்.

1990: 20 வயதான மைக் டைசன், பிரபல குத்துச்சண்டை சம்பியன் ஜேம்ஸ் பஸ்டர் டக்ளஸை வீழ்த்தி இளம் உலக சம்பியனானார். குத்துச்சண்டை வரலாற்றில் மாபெரும் ஆச்சரிய பெறுபேறாக இது கருதப்படுகிறது.

1996: திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில், குழந்தைகள் உட்பட 26பேர் படுகொலை செய்யப்பட்டனர். 30பேர் காயமடைந்தனர்.

1997: டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005: ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

2008: கிழக்குத் திமோரின் ஜனாதிபதி ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா, அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

2011: சுமார் 30 வருடகாலம் எகிப்திய ஜனாதிபதியாக பதவி வகித்த ஹொஸ்னி முபாரக் ஆர்ப்பாட்டங்களையடுத்து ராஜினமா செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .