2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வழக்கு தவணைகளுக்கு செல்லாதவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறிய ரக லொறியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி நான்கு மாடுகளை கொண்டுசென்றவர் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காதமையினால் அவரை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி பதில் நீதிவான் ஹயான் மீ ஹககே, நேற்று வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார்.   
                        
அசோகபுரம், மங்கள எலிய, புத்தளம் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.சுபைர் (வயது 39)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலைப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்கு சிறியரக லொறியொன்றில் நான்கு மாடுகளைக்கொண்டு சென்ற போது குச்சவெளிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கெதிராக குச்சவெளி நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அவர் பல வழக்குத் தவணைகளுக்குச் சமூகமளிக்கவில்லை.

எனவே, சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்து குச்சவெளி நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .