2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நூற்றாண்டு ஜனன தினம்...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 3ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்கவின் நூற்றாண்டு ஜனனதினம், இம்மாதம் 15ஆம் திகதி பூர்த்தியாகின்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அவரது உருவப்படமொன்று நேற்று வியாழக்கிழமை (11) திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். 1916ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி பிறந்த முன்னாள் ஜனாதிபதி விஜேதுங்க, 2008.09.21ஆம் திகதியன்று இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு - குஷான் பதிராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .