2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'பிரபாகரனால் முடியாதது சம்பந்தனாலும் சி.வி.யாலும் முடியாது'

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர முடியாத எந்தவெரு உரிமைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனாலேயோ, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாலேயோ அல்லது அவரது பாட்டனாராலேயோ பெற்றுத்தரமுடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
     
மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி, மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் என்.புட்பமூர்த்தி தலைமையில் நேற்று வியாழக்கிழமை (11) மாலை நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
எமது தமிழ் மாணவர்கள் கல்வியை மேலோங்கச் செய்வதற்கு நாம் அனைவரும் அயராது பாடு படவேண்டும். இவர்கள் ஏனைய இனத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டி போட்டு முன்னேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த நாட்டிலே பல பெரிய பெரிய பதவிகளை வகித்திருந்தவர்கள் தமிழர்கள். 

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பாவற்கொடிச்சோனை, உன்னிச்சை, கரடியனாறு மற்றும் காக்கச்சிவட்டை போன்ற எல்லைப்புறங்களிலிருக்கின்ற பாடசாலைகளுக்குக்கூட சிற்றூளியர்களைக்கூட நியமிக்க முடியாத நிலமை காணப்படுகின்றது. 

இவற்றைக் கருத்திற்கொண்டு எமது மாணவர்கள் கல்வியிலும் கலை, கலாசாரத்திலும், மேலோங்கச் செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
வடக்கு மற்றும் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இன்னும் சிலருக்குமிடையில் பதவிப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

தற்கால சூழலுக்கு ஏற்றவகையில் கடந்த கால இழப்புக்களை ஈடு செய்வதற்கு, தற்போதிருக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, எமது மக்களின் கல்வி மற்றும் கலை கலாசாரம், போன்றவற்றை மேம்படுத்த அனைவரும் முன்னிற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X