காதலர் தினம்
12-02-2016 02:38 PM
Comments - 0       Views - 66

காதல் வந்தால்
யுத்தங்கள் இல்லாமல்
காதுகளில் சங்கீதம் கேட்கும்
தூக்கங்கள் இல்லாமல்
கண்களில் கனவுகள் பூக்கும்
 
சிறகுகள் இல்லாமல்
வானத்தில் இளமனசுகள் பறக்கும்
விறகுகள் இல்லாமல்
கண்களில் காதல் வேட்கை எறியும்
உலகம் வண்ணாத்திப் பூச்சி
வண்ணமாகும்
 
அருவுருவங்கள் எல்லம்
காதலின் சின்னங்களாகும்
சட்டைப் பைக்குள் அழைபேசிகள்
அழைப்புக்கள் துடிக்கும்
அறுவை சிகிச்சைகள் இல்லாது
இதயங்கள் கூடுமாறும்
 
இரவுகள் இதயத்தை வறுக்கும்
ஆகாரம் தொண்டையில் பொறுக்கும்
உள்ளங்கள் மௌனமாய் சிரிக்கும்
இரவு நேரம் தலையணைகள்
சுகம் கொடுக்கும்
 
புருவங்கள் முன்னே உருவங்கள்
இழையோடும்
எண்ணங்கள் குவி தேடும்
கண்ணங்கள் கவி பாடும்
எங்கும் வண்ணங்கள் காணும்
காதலின் சுவடுகள் கணமாகும்
 
உறவுகள் எல்லாம் தூரமாய் போகும்
நட்புகள் சின்னசின்னதாய் விரிசல் வெடிக்கும்
காதல்தேடல் ஒன்றே உயர்ந்து நிற்கும்
 
இதயத்திற்கு,இதயம் காதல் சுமக்கும்
கைகள் உரசினாலும் தீப்பொறிகள் பறக்கும்
விழிகளின் பார்வைகளில் அமுதங்கள் சுரக்கும்
கீறல்கள் கூட கவிதைகளாய் பிறக்கும்
 
அசிங்கங்கள் கூட காதலின்
சின்னமாய் வானம் இடிக்கும்
கால்களும் பாறைகள் உடைக்கும்
கைகளும் காவிங்கள் படைக்கும்
கோடுகள் பரியாமல்
விழிகளும் ஓவியங்கள் தீட்டும்
விடைகளுக்கு விடைகள் தேடும்
புதிய பயணம் காதல்....
 
எஸ்.கார்த்திகேசு

 
"காதலர் தினம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty