இந்தோனேஷியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்
25-02-2016 03:33 PM
Comments - 0       Views - 25

இந்தோனேஷியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டமிடுதலில், ஆயுததாரிகள் முன்னேறிய நிலையில் காணப்படலாம் எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியா, அங்கு செல்லும் தனது நாட்டுப் பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளது. இவ்வாறானதொரு எச்சரிக்கையை, மலேஷியாவுக்கு விடுத்து சில நாட்களின் பின்னர், இந்தோனேஷியாவுக்கும் விடுக்கப்பட்டுள்ளமை இதில் முக்கியமானதாகும்.

'அண்மைக்கால அறிகுறிகளின் அடிப்படையில், இந்தோனேஷியாவில் தாக்குதல்களைத் திட்டமிடுவதில் பயங்கரவாதிகள், முன்னேறிய நிலையில் காணப்படுகிறார்கள்" என, வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 'ஜகார்த்தா, பாலி, லம்பொக் உட்பட இந்தோனேஷியாவில், உச்சபட்ச கவனத்துடன் இருக்குமாறு நாம் ஆலோசனை வழங்குகிறோம். அங்கு, பயங்கரவாதத் தாக்குதலுக்கான அதிக ஆபத்து இருப்பதே அதற்கான காரணமாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் குறைவான இடங்களுக்குச் செல்லும் போது அதிக கவனத்துடன் காணப்படுமாறு கேட்டுள்ள அந்த அறிவிப்பு, இரவுக் களியாட்ட விடுதிகள், மதுபான நிலையங்கள், சிற்றுண்டி நிலையங்கள், உணவகங்கள், சர்வதேச ஹொட்டல்கள், விமான நிலையங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியவற்றை, தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடிய இடங்களென, முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

"இந்தோனேஷியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty