செங்கை ஆழியான் காலமானார்
29-02-2016 10:02 AM
Comments - 2       Views - 281

இலங்கையின் புகழ்பூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான், தனது 75ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். கந்தையா குணராசா என்ற இயற்பெயர் கொண்ட இவர், செங்கை ஆழியான் என்ற பெயராலேயே அறியப்பட்டார்.

1941ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி பிறந்த இவர், புனைகதைகளையும் வரலாற்றுசார் ஆக்கங்களையும் கட்டுரைகளையும் எழுதிப் புகழ்பெற்றவராவார்.

யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் போன்ற வரலாற்று

நூல்களையும் ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற வரலாற்று ஆய்வு நூலையும், குறுங்கதைகள், புதினங்கள் பலவற்றையும் இவர் எழுதியவராவார்.

ஈழநாடு பத்திரிகையில் அவர் தொடராக எழுதிவெளியிட்ட கிடுகுவேலி சிறுகதை, வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்டது. அதேபோல், அவரது வாடைக்காற்று, புதியம் ஆகிய படைப்புகள், திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தன.

தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்ற அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பல்கலைக்கழகக் கல்வியைக் கற்றார்.

"செங்கை ஆழியான் காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
subramaniam jeyarajah 03-03-2016 05:45 AM
மெளனம் சாதித்து மடிந்தது. மெளனம் கலைந்த அவர் கலைப் படைப்புகள் என்றும் அழியா வரம் பெற்றவை.அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
Reply .
0
0
subramaniam jeyarajah 03-03-2016 05:46 AM
மெளனம் சாதித்து மடிந்தது. மெளனம் கலைந்த அவர் கலைப் படைப்புகள் என்றும் அழியா வரம் பெற்றவை.அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty