அசிட் வீச்சில் பங்களாதேஷ் முன்னிலையில்
29-02-2016 03:13 PM
Comments - 0       Views - 246

கணவனால் அசிட் வீச்சுக்கு (திராவகம் வீச்சு) உள்ளான பெண்ணொருவர், உடல் முழுதும் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விபரீத சம்பவமொன்று அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

டானியா பர்வின் என்ற 25 வயது பெண்ணே இத்தகைய துர்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். இறை வழிபாட்டுக்காக சென்றபோது இவர், அசிட் வீச்சுக்கு உள்ளாகியதாக தெரியவருகிறது.

இவர் ஏன்? அசிட் வீச்சுக்கு உள்ளாகினார் என்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனாலும், அவரது முகத்தின் இடதுப்புறத்திலும் உடலின் மேற்பாகத்திலும் எரிகாயங்கள் பரவலாக காணப்படுகின்றன.  உடல் முழுதும் கட்டுத் துணிகள் சுத்தப்பட்ட நிலையில் இவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று  வருகின்றார்.

பங்களாதேஷிசில் அசிட் வீச்சுக்கு உள்ளான 3625 பேரில் இவரும் ஒருவரென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நாட்டில் 1999 - 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 3270 பேர் அசிட் வீச்சுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 1847 பெண்களும் 901 ஆண்களும் 877 சிறுவர்களும் உள்ளடங்குவதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்களை பின் தொடர்தல் மற்றும் சீதன பிரச்சினைக்காக இவ்வாறு அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் அசிட் வீச்சுக்கு உள்ளானவர்கள் தினமும் வலியை உணரவேண்டும் என்பதே எதிராளியின் நோக்கமெனவும் பங்களாதேஷின் தேசிய பெண்கள் சட்டத்தரணி சங்கம் அறிவித்துள்ளது.

இதன் விளைவு கொலையாகவும் சில நேரங்களில் தற்கொலைகளாகவும் அமைவதாகவும் இச்சம்பவங்களினால் இதுவரை 1,847 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 301 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் கூறியுள்ளது.

"அசிட் வீச்சில் பங்களாதேஷ் முன்னிலையில்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty