கசிந்த Huawei P9 புகைப்படங்கள்
04-03-2016 09:15 AM
Comments - 0       Views - 183

இவ்வாண்டின் முதலாவது அரையாண்டில் வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள Huaweiயின் புதிய திறன்பேசியான P9 இன் close-up புகைப்படங்களை venturebeat இணையத்தளம் வெளியிட்டுள்ளது. வெளியான புகைப்படங்களில், திறன்பேசியின் உடல் வெளிக்காட்டப்பட்டுள்ளதோடு, அதன் பின்புறத்திலுள்ள இரண்டு கமெராக்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிவரவுள்ள Huaweiயின் புதிய திறன்பேசியான P9-இன் பின்புறத்தில் இரண்டு கமெரா காணப்படுகின்ற வசதியானது, கடந்தாண்டு வெளியான Huaweiயின் Honor 6 Plus திறன்பேசியில் காணப்படும் கமெரா வசதியின் புத்தாக்கமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.

திறன்பேசிகளின் புகைப்படங்களை கசியவிடும் evleaks என அறியப்படும் venturebeatஇன் Evan Blass, அநாமதேய நபர் ஒருவரிடமிருந்து பெற்ற மேற்படிப் புகைப்படங்களின்படி, வெளிவரவுள்ள Huaweiயின் புதிய திறன்பேசியான P9 ஆனது இரண்டு, 12-megapixel உணரிகளை, குவியப்படுத்த உதவும் Leica தயாரிப்பு வில்லைகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி Huaweiயின் புதிய திறன்பேசியான P9 ஆனது Huaweiயின் P வரிசையின் ஐந்தாவது வெளியீடு ஆகும். எனினும் இது இருக்கின்றதாக என உறுதிப்படுத்தாத Huawei, கடந்த வாரம் ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸிலும் வெளியிட்டிருக்கவில்லை.

வெளிவரவுள்ள Huaweiயின் P9 ஆனது, வழமையான, விலை குறைந்த 5.2 அங்குல திரை கொண்டது உள்ளடங்களாக நான்கு வகைகளில் வெளிவரவுள்ளது. இதில், ஒன்று பாரிய திரையைக் கொண்டதாகவும் சக்திவாய்ந்த உள்ளீடுகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, HiSilicon Kirin 950 octa-core processor ஐயும் 3GB நினைவகத்தையும் 3900mAh மின்கலத்தையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையோ அல்லது எப்போது வெளிவருமோ என்ற தகவல்கள் வெளியாகியிருக்காத நிலையில், இத்தகவல்கள் எதிர்வரும் இளவேனிற் பருவகாலத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கசிந்த Huawei P9 புகைப்படங்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty