வீடுகள் கையளிப்பு
07-03-2016 12:32 PM
Comments - 0       Views - 40

மு. இராமசந்திரன் 

காலி, வல்பிட்டித்தோட்டம் மற்றும் சிட்ரஸ் தோட்ட மக்களுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் வல்பிட்டி தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 25 வீடுகளும் சிட்ரஸ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஊடகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஜயந்த கருணாதிலக, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல பண்டாரி கொடகே, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

" வீடுகள் கையளிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty