மனைவி பிரிந்தால் 200 பேரையும் கொல்வேன்: விமானியின் மிரட்டல்
09-03-2016 10:50 AM
Comments - 0       Views - 621

'என் மனைவி என்னை விட்டு பிரிந்து செல்லப்போவதாக அறிவித்து விட்டார். இதனால் நான் ஓட்டும் விமானத்தை எங்காவது மோத விட்டு, விமானத்திலுள்ள 200 பேரை கொலை செய்து விட்டு நானும் செத்துவிடுவேன்' என்று விமானியொருவர் அதிரடி மிரட்டல் விட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமிலிருந்து ஜப்பானை நோக்கி பயணிக்க தயாராக இருந்த விமானத்தில் சுமார் 200 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானத்தை ஓட்ட 40 வயது விமானி நியமிக்கப்பட்டிருந்தார். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு, குறித்த விமானத்தின் விமானியொருவர் அலைபேசி மூலம் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக அறிவித்து விட்டாள். இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன். விமானத்தை எங்காவது மோதி அதிலுள்ள 200 பேரையும் கொலை செய்துவிட்டு, நானும் செத்துவிடுவேன்' என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை ரோம் நகரில் உள்ள பியூமாசினோ விமான நிலையத்தில் இருந்து புறப்படவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் தற்கொலை மிரட்டல் விடுத்த விமானியை விமானத்தில் இருந்து இறக்கினர். அவருடன் இருந்த மற்றொரு சக விமானி விமானத்தை ஓட்ட அனுமதித்தனர். இதன் மூலம் நடைபெற இருந்த மிகப்பெரிய சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது.

 

"மனைவி பிரிந்தால் 200 பேரையும் கொல்வேன்: விமானியின் மிரட்டல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty