முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு பெண் வன்புணர்வு
09-03-2016 02:29 PM
Comments - 0       Views - 61

வலஸ்முல்ல, வராப்பிட்டியப் பிரதேசத்தில் 45 வயதுடைய  பெண்ணொருவரை, முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று சிலர் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
நேற்று செவ்வாய்க்கிழமையன்று (08) கடைக்குச் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இனந்தெரியாத சிலர் முச்சக்கரவண்டியில் குறித்த பெண்ணைக் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரிவித்த வலஸ்முல்லப் பொலிஸார், முறைப்பாட்டுக்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு பெண் வன்புணர்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty