2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிணையில் எடுப்பது பிந்தியது

Gavitha   / 2016 மார்ச் 30 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை பிணையில் எடுப்பது, நாளை 31ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

செலிங்கோ குழுமத்துக்குச் சொந்தமான கோல்டன் கீ நிறுவனத்துக்குரிய 700 கோடி ரூபாய் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சிசிலியா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த 24ஆம் திகதியன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மோஷன் ஊடாக பிணையை முன்வைப்பதற்காக, நீதிமன்றத்துக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை சமுகமளித்திருந்த போதிலும் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி பிணையாளர்கள் இன்மையால், பிணை வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றையதினம் தீர்மானித்திருந்தது.

அதில், சரீரப்பிணைக்காக அரச நிறைவேற்று அதிகாரியைப் பிணையாளியாக வைக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பிணை நிபந்தனையைப் பூர்த்திசெய்யாததையடுத்தே சிசில் கொத்தலாவலவுக்கான பிணையை, கொழும்பு மேல் நீதமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக்க நிராகரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X