கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம்
31-03-2016 09:30 AM
Comments - 0       Views - 368

இந்நோய் யாரை பீடிக்கும்?

 • முதல் பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும்  தாய்மார்(Pசiஅi)
 • வயது குறைந்த தாய்மார் (20 வயது)
 • பல குழந்தைகளைப் பெற்ற தாய்மார்
 • நீரிழிவு நோயுள்ள தாய்மார்
 •  உயர்குருதி அழுத்தமுடைய தாய்மார்

இதனை எவ்வாறு அறிந்துகொள்வது?

 • ஒவ்வொரு கர்ப்பிணியினதும் இரத்த அழுத்தத்தை மிகச்சரியாகக் கணிப்பிட்டுக்கொள்ள வேண்டும். முதலாவது கிளினிக்கில் எடுக்கப்படும் அளவீடு இந்நோயைக் கண்டுபிடிக்க மிக முக்கியமானது. முதலாவது கிளினிக்கில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டைவிட, சுருக்க அழுத்தம் 30 அலகுகளால் அல்லது விரிவழுத்தம் 15 அலகுகளால் கூடுமாயின் அது உயர்குருதி அழுத்தம் எனக்கொள்ளப்படும்

உதாரணம்:- முதல் கிளினிக் அளவீடு 90ஃ70. இது பின்னர் 120ஃ70 அல்லது 100ஃ85ஆக காணப்படும். ஆனால், 130ஃ90 ஆக அல்லது அதைவிடக் கூடுதலாக இருக்குமானால் உயர்குருதி அழுத்தமாகும்.

 • சிறுநீர் பரிசோதனையின் போது அல்புமின் இருந்தால் அல்லது உடல்வீக்கம், உடல்நிலை கூடல் என்பனவும் இந்நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகள்

இந்நோய் வலிப்பை ஏற்படுத்தலாம். இது சிசுவுக்கும் தாய்க்கும் ஆபத்தனாது.

     இதன் அறிகுறிகள்

 • கடுமையான அல்லது தொடர்ச்சியான தலைவலி
 • பார்வை மங்குதல்
 • வாந்தி
 • வயிற்றின் மேற்பகுதியில் அல்லது வலதுபக்கமாக வலி

தாய்க்கு வலிப்பு ஏற்படுவதால் குழந்தையின் பிரதான அங்கங்கள் பாதிப்புறல் (ஈரல், சிறுநீரகம், மூளை, சுவாசப்பை)

உயர்இரத்த அழுத்தம்
சிசுவின் வளர்ச்சி குன்றுதல்
கருப்பையில் சிசு மரணித்தல்
குறைப்பிரசவம்
தொப்புள்கொடி விலகல்

நோயை அறிந்தவுடன் செய்ய வேண்டியவை

 • சிறுநீர்ப் பரிசோதனை (அல்புமின்)
 • வைத்தியரை நாடவும்
 • வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்

சிகிச்சை முறை

 • ஓய்வு எடுத்தல் (இது இரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும்)
 • மருந்தை உட்கொள்ளல்
 • மன ஆறுதல் (Mental Rest)
 • பிரசவித்தல் (Delivery)
"கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty