2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாகிஸ்தானின் முதலாவது ஆடைத்துறை கண்காட்சி ஆரம்பம்

George   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் முதலாவது ஆடைத்துறை கண்காட்சியானது பாகிஸ்தானிய வணிக அமைச்சர் தஸ்டிகர் குர்ரம் காஹன் மற்றும் இலங்கை வணிக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாகிஸ்தானிய வர்த்தக சபை பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.எம். முனிர் மற்றும் செயளாலர் டிடிஏபி. ராபியா ஜவேரி ஆகஹா ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.  

'டெக்ஸ்போ 2016' ஆடை கண்காட்சி   பாகிஸ்தானிய வர்த்தக அபிவிருத்தி சபையினால் பாகிஸ்தானிய வணிக அமைச்சுடன் இணைந்து கராச்சி ஏற்றுமதி நிலையத்தில் ஏப்ரல் 7-10 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னனியான ஆடை உற்பத்திகளை காட்சிப்படுத்தும் முகமாக 350 ற்கும் அதிகமான கூடங்கள் அமைக்ககப்பட்டிருக்கின்றன.
 
மிகப்பெரிய ஆடைஉற்பத்தி நிறுவனங்களான TMA, PRGMEA, PHMA, விளையாட்டு பொருள் உற்பத்தி நிறுவனங்கள், கம்பள உற்பத்திகள்,APUBMA, PTEA, PLGMEA, பாகிஸ்தானின் நவநாகரிக மற்றும் வடிவமைப்புடைய ஆடை உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்காக பாரிய இடத்தினை முன்பதிவு செய்திருக்கின்றன. பாகிஸ்தானின் ஏற்றுமதியாளர்களுக்கு உலகளவிலுள்ள இறக்குமதியாளர்களுடன்  உறுதியான வணிக உறவினை நிர்மானிப்பது இவ் நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
  
கண்காட்சியாளர்களுக்கு அப்பால்  51 நாடுகளிலுள்ள  600 மேலதிகமான வெளிநாட்டு தூதுக்குழுக்கள் இக்;கண்காட்சியில் பங்குபற்றவுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாகிஸ்தானிய அமைச்சர் குர்ரஹம் தஸ்டிகிர் காஹன் இருவரும் சிந்த் மாகாணத்தின் ஆளுனர் கலாநிதி. இஸ்ரதுல் இபாத்  கராச்சியில் அமைந்துள்ள ஆளுனர் இல்லத்தில் சந்திந்தமை குறிப்பிடதக்கது. இராணுவ நடவடிக்கையின் பின்னர் பாகிஸ்தானில் சட்டம் மற்றும் ஒழுங்கு விருத்தியடைந்துள்ளமையானது உலக நாடுகளினால் பாராட்டப்படுவதாக  இலங்கை வணிக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் சிறந்த இருதரப்பு உறவினை அனுபவிப்பதாகவும் இலங்கை முதலீட்டாளர்கள் விவசாயம், கட்டுமானத்துறை மற்றும் ஏனை துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர் என இலங்கை வணிக அமைச்சர்  கருத்து தெரிவித்தார்.

பாகிஸ்தானிய வணிக அமைச்சர் குர்ராஹம் தஸ்டிகர் காஹன் கராச்சி எக்ஸ்போ நிலையத்தில் இடம்பெற்ற வர்த்தக கண்காட்சியானது வணிக கலந்துரையாடல்களுக்கும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக நடவடிக்கiயில் ஈடுபடவும் உதவிபுரிந்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன்; 15 பேர் அடங்கிய இலங்கை வியாபாரக் குழுவுடன்'டெக்ஸ்போ 2016 ' கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக கராச்சியை சென்றடைந்தனர்.  'டெக்ஸ்போ 2016'கண்காட்சியினை பார்வையிட வருகைத்தரும் வெளிநாட்டவர்கள் நாட்டின் அழகிய சூழல், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தினையும்  அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர் எனக்குறிப்பிட்டார்.

தேசிய மின்சக்தி துறைக்கு சேர்க்கப்பட்டுள்ள எல்.என்.ஜி. இயற்கைவாயு இணைப்பின் காரணமாக எதிர்வரும் காலங்களில் பாகிஸ்தானின் ஆடைத்துறையானது மேலும் அபிவிருத்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அத்துடன் பாகிஸ்தான் ஜிஎஸ்பி வரிச்சலுகையினை அனுபவிப்பதானது ஆடைத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் பங்களிப்புச் செய்கின்றமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .