2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ்.முஸ்லிம் யுனைட்டட் அணி வெற்றி

Kogilavani   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

தமிழ் சிங்கள பு வருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஜின்னாஹ் மைதானத்தில் நடைபெற்ற 40வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிநேகபூர்வ கால்ப்பந்தாட்ட போட்டியில் யாழ்.முஸ்லிம் யுனைட்டட் அணி வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சென் மேரிஸ் அணிக்கும்  யாழ்.முஸ்லிம் யுனைட்டட் அணிக்குமிடையிலான இந்த ஆட்டமானது புதன்கிழமை (20) மாலை நடைபெற்றது.

யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணியானது  1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு யாழ்.நகரில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. எனினும் புத்தளம் நகருக்கு இடம்பெயர்ந்த பின்பு புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்து தற்போதும் புத்தளம் நகரில் போட்டியில் பங்கேற்று வரும் அணியாகும்.

மேற்படி சிநேகபூர்வ கால்ப்பந்தாட்ட போட்டியில் யாழ்.முஸ்லிம் யுனைட்டட் அணியானது ஒரு கோலினால் வெற்றி பெற்றது. அவ் அணியின் முன்னாள் பிரபல வீரர் எம்.ரம்சீன் தனது அணிக்கான கோலை பெற்றுக்கொடுத்தார்.

யாழ்.முஸ்லிம் யுனைட்டட் அணிக்காக அன்றிலிருந்து இன்றுவரைக்கும் முனாஸ், முஸாதிக், சுகார்னோ, ஜான்சின், ஜுனைத், சித்தீக், ஜசூர், நியாஸ், ரம்சின், ஜரீத், ரிபாய், சுவைத், ரஜான், ஜனூசன், வாஜித் மற்றும் சமீர் ஆகிய வீரர்கள் தியாக உணர்வோடு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X