2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்காக 70 இலட்சம் ஒதுக்கீடு

Kogilavani   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்துக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 70 இலட்சம் ரூபாயை ய ஒதுக்கீடு செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் றியாத்.ஏ.மஜீத் தெரிவித்தார்.

இதற்கமைவாக கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை, பாண்டிருப்பு விளையாட்டு மைதானம், காரைதீவு கனகரெட்னம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு தலா ரூபா 10 இலட்சம்  வீதமும்; திருக்கோவில் விளையாட்டு மைதான அபிவிருத்துக்கு ரூபாய் 30 இலட்சமுமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்; ஹரீஸ் ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தி வேலைகளை உடன் ஆரம்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திகாமடுல்ல மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் தமிழ் பிரதேச விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டதை தொடர்ந்து இந்நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .