2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பா.ஜ.கவில் இணைந்தார் பவர் ஸ்டார்

George   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அக்குபன்ஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சொந்த திரைப்படம் மூலம் பவர் ஸ்டார் சீனிவாசனாக சினிமாவுக்கு வந்தார். 

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகராக இருந்த அவர், நடிகர் ஆன பிறகு அரசியலுக்குள் நுழைய முயன்றார். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியில் சேர முயன்ற சீனிவாசன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் இருப்பதால் அந்த கட்சிகள் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை.

இறுதியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். அந்தக் கட்சியும் பச்சைக்கொடி காட்ட நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 

'நான் எதையும் எதிர்பார்த்து பாரதிய ஜனதாவில் சேரவில்லை. கட்சியின் கொள்கையும் பிரதமர் நரேந்திரமோடியின் செயல்பாடுகளும் பிடித்து சேர்ந்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்வேன். எனது ரசிகர் மன்றமும் பாரதிய ஜனதா வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்கும்' என்கிறார் பவர் ஸ்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X