2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக கலாநிதி றமீஸ் அப்துல்லா தெரிவு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 20 வருடகால வரலாற்றில் முதலாவது பேராசிரியராக அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான கலாநிதி றமீஸ் அப்துல்லா தெரிவாகியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக உயர் நிர்வாகிகள் முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின்போது, திறமை அடிப்படையில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

அம்பாறை, சம்மாந்துறையைச் சேர்ந்த கலாநிதி றமீஸ் அப்துல்லா சிறந்த திறனாய்வாளரும் கவிஞரும் ஆவார். கலாநிதி றமீஸ் அப்துல்லாவுக்கு தற்போது வயது 47 என்பதால் இவர் 10 வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக சேவையாற்ற வாய்ப்புள்ளதால் வாழ்நாள் பேராசிரியராக திகழும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் இவருக்கு முன்னராக தமிழ்த்துறைப் பேராசிரியார்களாக காரைதீவைச் சேர்ந்த முத்தமிழ் வித்தகர் அமரர் சுவாமி விபுலானந்தர் மற்றும் கல்முனையைச் சேர்ந்த கலாநிதி எம்.எ.நுகுமான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்த மாவட்டத்தில் மூன்றாவது தமிழ்த்துறைப் பேராசிரியராக றமீஸ் அப்துல்லா தெரிவாகியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .