2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உதவி ஆசிரியர்கள் விவகாரம்: பிரேரணை குறித்து மே.3இல் கலந்துரையாடல்

Sudharshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

பெருந்தோட்டப்  பாடசாலைகளுக்கென 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை, இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கக் கோரி, இம்மாதம் 26ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில்  அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய மாகாண சபை அமர்வில் வைத்து  கலந்துரையாடப்படுமென மத்திய மாகாண சபையின் தலைவர் எல்.டி.நிமலசிறி அனுப்பியுள்ள நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளில்  ஆசிரியர் உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3/11ற்குள் உள்வாங்கி அவர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 6,000 ரூபாய் ஊதியத்துக்குப் பதிலாக ஆசிரியர் சேவை 3/11ற்கான சம்பள திட்டத்தை அமுல்படுத்துமாறு' கோரி மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பீ.சக்திவேல் ஆகியோர் பிரேரனையொன்றை முன்வைத்திருந்;தமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரேரணை தொடர்பிலே மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளதாக மாகாண சபையின் தலைவர் எல்.டி.நிமலசிறி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .