2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளின் தலைவராக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்ஸன், இவ்வருட பிற்பகுதியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான 29ஆவது தலைவராக மாறவுள்ளார்.

இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-இல் நியூசிலாந்துக்கு தலைவராக இருந்த வில்லியம்ஸன், இதுவரையில், 36, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் பிரென்டன் மக்குலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வில்லியம்ஸனே நியூசிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படுவார் என ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (27) ஒக்லாந்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைபவ ரீதியாக, மூன்று வகையான போட்டிகளினதும் நியூசிலாந்து அணியின் தலைவராக வில்லியம்ஸன் உறுதிப்படுத்தப்பட்டிருந்தார்.

நியூசிலாந்து அணியின் அடுத்த சர்வதேச சுற்றுப்பயணம், ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் ஆபிரிக்காவுக்கு இடம்பெறவுள்ள நிலையில், சிம்பாப்வேயிலும் தென்னாபிரிக்காவிலும் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து கலந்து கொள்கிறது.

அந்தவகையில், தற்போது 25 வயதான வில்லியம்ஸன், ஸ்டீபன் பிளெமிங், ஜோன் பார்க்கருக்கு அடுத்ததாக, டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துக்கு தலைமை தாங்கவுள்ள மூன்றாவது இளம் தலைவராக மாறவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X