2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உரிமைகளை வலியுறுத்தி காவத்தையில் கூட்டு மே தின கூட்டம்

Sudharshini   / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பல அமைப்புகளின் ஒன்றிணைந்த மே தின கூட்டம், காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) காலை 10 மணிக்கு நடடைபெறவுள்ளது.

மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், இலங்கை கம்னியூஸ்;ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் பணப்பாட்டுக் கழகம், சமூக சீராக்கல் இயக்கம் ஆகியன ஒன்றிணைந்து இக்கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன.

மேற்படி அமைப்புகள், 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்கக் கோரியும் ஆசிரிய உதவியாளர்களை நிரந்தரமாக்குமாறும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க கோரியும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தியும் இம் மே தின கூட்டத்தை நடத்தவுள்ளன.

இக்கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா, மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இரா.நெல்சன் மோகன்ராஜ், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளர் டபிள்யூ.சோமரட்ன, மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் பா.மகேந்திரன், சமூக சீராக்கல் இயக்கத்தின் அழைப்பாளர் எம்.கமலதாசன்  உட்பட பலர் உரையாற்றவுள்ளனர்.

இதன்போது, உழைக்கும் மக்களின் தலைமையிலான சோசலிச சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சமூக மாற்றத்தை வேண்டிய, கலை நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .