2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெளிமாவட்ட மீனவர்களை முல்லைக் கடலில் அனுமதிக்க முடியாது

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு மாவட்ட கடல் எல்லைக்குள் வெளிமாவட்ட சட்டவிரோத மீன்பிடியாளர்கள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது” என முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கொக்கிளாயில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாக கொக்கிளாய் கடற்றொழிலாளர்களினால் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொக்கிளாய் பகுதிக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டபோது, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளதை அவதானித்தேன்.

இதனையடுத்து, அவ்வாறு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் உதவிப் பணிப்பாளர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .