2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உதவி பொருட்கள் கையளிப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில் இயங்கி வரும் புத்தளம் கெயார் அண்ட் செயார்நிறுவனம் புத்தளம் சவீவபுரம் பிரதேசத்தில் இயங்கும் விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைக்கு உதவி பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (28) காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், புத்தளம் நகர  சபையின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்தியா, புத்தளம் நகர சபையின் சுகாதார பரிசோதகர் எம்.சுரேஷ், சமூக பிரிவின் இணைப்பாளர் எம்.எஸ்.எம். ஜிப்ரி, மன வள ஆலோசகர் ஜே. மபாகிரா, புத்தளம் பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் மலிக் உள்ளிட்ட  பலரும் கலந்துசிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இந்நிறுவனத்தின் பொறுப்பாளர்,

“சமூகத்துக்கு சேவைகளை வழங்க வேண்டும் என்ற ஒரே நன்நோக்கத்தோடு கடந்த செப்டெம்பர் மாதம் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. வசதிகள் அற்ற பல்வேறு தேவைகளை உடைய மக்களை நாம் நேரடியாக வீடுகளுக்கு சென்று இனங்கண்டு அவர்களுக்கு தேவையான  பொருட்கள், வீடு அமைப்புகள், வேலை  வாய்ப்ப்புகள்  போன்ற பிரச்சினைகளை  இனங்கண்டு அவைகளை தீர்த்து வைத்ததன் மூலம் எமது முதலாவது பயணத்தை நாம் ஆரம்பித்தோம்.

அதனை தொடர்ந்து, புத்தளம்  மணல் குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் திறமையான அதேவேளை, வசதி குறைந்த 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதோடு தினந்தோறும் போஷாக்கான காலை உணவு வகைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

அதேபோல் புத்தளம் நகரின்  பின்தங்கிய மற்றுமொரு கிராமமான முள்ளிபுரம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 30 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பாடசாலை உபகரணங்களோடு தைத்த  சீருடைகளையும் வழங்கியுள்ளோம்.

எமது நான்காவது  உதவித் திட்டமான இந்த திட்டத்தை நாம் செயற்படுத்தும்போது இறைவனின் அற்புதத்தை பார்த்து இத்தகைய மாணவர்களுக்கு உதவி புரிய கிடைத்ததில் ஆத்ம திருப்தியை அடைகிறோம். இந்த விசேட தேவையுடைய மாணவர்களை நாம் மாற்று திறனாளிகள் என அழைப்பதை விட சுவனத்து மலர்கள் என அழைப்பதில் பெருமையடைகிறோம்” என்றார்.

இந்த பாடசாலையில் கல்வி பயிலும் 16 மாணவர்களுக்கு மேற்படி அமைப்பினால் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு பாடசாலைக்கு தொலைக்காட்சி உட்பட பெறுமதியான பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்களும், இனிப்பு பொட்டலங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .