2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரியாவில் போரேற்பட அனுமதியோம்'

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியத் தீபகற்பத்தில் போரேற்படுவதற்கோ அல்லது குழப்பங்கள் ஏற்படுவதற்கோ அனுமதிக்கப் போவதில்லையென, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலைமையொன்று, எவருக்கும் அனுகூலமாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதங்கள் தொடர்பான வடகொரியாவின் முயற்சிகளும் அந்நாட்டின் அண்மைக்கால ஏவுகணைச் சோதனைகளும், பிராந்தியத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தென்கொரியா மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற அச்சம் காணப்படுகிறது. அவ்வாறான எச்சரிக்கைகளை, வடகொரியாவும் விடுத்துவருகிறது.

உலகில், வடகொரியாவுடன் ஓரளவு அனுசரணையாகச் செயற்படும் ஒருசில நாடுகளில், சீனாவும் ஒன்றெனக் கருதப்படுகிறது. வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்புகளையும் சீனா பேணிவருகிறது. எனினும், வடகொரியாவின் அணுசக்தி முயற்சிகளை, சீனா ஆதரிக்கவில்லை.

இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி, 'தீபகற்பத்தின் நெருங்கிய அயலவர் என்ற அடிப்படையில், போரையோ அல்லது குழப்பத்தையோ நாம் அனுமதிக்க மாட்டோம். அவ்வாறான நிலைமையொன்று, எவருக்கும் அனுகூலமாக அமையாது" எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .