2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.எம்.எப், 1.5 பில்லியன் டொலர் உதவி

Kanagaraj   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அதன் கடன் செலவுகளை குறைக்கவும் மற்றும் நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கைக்கும்,  சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

கூடுதல் வட்டிக் கடன்களைக் குறைந்த வட்டிக் கடன்களாக மாற்றுதல் உட்பட நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பெறும் ஒப்பந்தம் ஒன்று இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ளது என புளும்பேர்க் பொருளாதார அவதானிப்பு நிலையம் கூறியுள்ளது.

இலங்கை 2020 இல், அதன் வரவு - செலவுத்திட்ட குறையை மொத்த தேசிய உற்பத்தியின் 3.5 சதவீதமாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்தக் கடனுக்கு சர்வதேச நாணய நிதியத்தில் நிறைவேற்றுக்குழுவின் அங்கிகாரம் பெறப்படவுள்ளது. 

இது கிடைத்தால் அதைத் தொடர்ந்து 650 மில்லியன் டொலர் வரையிலான வேறு கடன்களையும் பெறக்கூடியதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அங்கிகாரம் தெரிவிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்தக் கடனை இலங்கை எதிர்பார்த்தது என மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், கடந்த மாதம் கூறியிருந்தார். 

சர்வதேச சந்தையில் மூன்று பில்லியன் பெறுமதியான முறிகளை விற்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

ரூபாவின் பெறுமதி ஆகவும் குறைந்த மட்டத்துக்குப் போயுள்ளது. இதனால் வெளிநாட்டு நாணய ஒதுக்கும் செய்மதி நிலுவையும் மோசமாகியதால் ரூபாவின் பெறுமதியை செயற்கையாக அதிகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. 

அரசாங்க நிதிக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் ஸ்ரீ லங்கா எயர் லைன்ஸ் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசாங்கம் தீவிரமான ஈடுபட்டுள்ளது என சர்வதேச நாயண நிதியம் கூறியுள்ளது. 

30 வருட கால யுத்தம் முடிந்த போது 2009இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெரும் தொகையெனக் கூறக்கூடிய 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை 2012 இல் பெற்றுக்கொண்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .