2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கடத்தப்பட்ட அவுஸ்திரேலிய தொண்டுப் பணியாளர் பற்றி தகவலில்லை’

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட அவுஸ்திரேலிய தொண்டுப் பணியாளரை கண்டுபிடிக்க மத்திய அரசாங்கம் இன்னும் முயற்சி செய்வதாக வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் அறக்கட்டளையான ஸர்டோஸியுடன் பணி புரிந்த, கெரி என அறியப்படுகின்ற 60 வயதான கதரின் ஜேன் வில்சன், ஜலாதபாத்திலுள்ள அரசசார்பற்ற நிறுவன அலுவலகத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (28) கடத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த பிஷொப், மேற்படி கடத்தலுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தவிர, ஆப்கானிஸ்தான் அதிகரிகளுடனும் பிரித்தியானியா உட்பட ஆப்கானிஸ்தானில் வளங்களைக் கொண்டிருக்கின்ற ஏனைய நாடுகளுடனும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி கடத்தப்பட்டவர் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முயலுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தவிர, கடத்தப்பட்ட பெண், நன்றாக இருப்பதே எங்களது முதன்மையான கரிசனை என்று பிஷொப் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .