2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா, செல்வம் அடைக்கலநாதன், வைத்திய கலாநிதி சிவமோகன் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் சிவநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு கலந்து கொண்ட மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்களால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்து கூறியதோடு சட்டத்தை சரிவர கடைப்பிடிக்கமையாலேயே தாம் வாழமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் சட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் தமிழர்களுக்கு ஒருமாதிரியும் சிங்களவர்களுக்கு  ஒருமாதிரியும் செயற்படுவதாகவும் அவர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து அவரை நீக்கி புதிய ஒருவரை நியமித்து சட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்தினாலே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடுமெனவும் தெரிவித்தனர்.

இதைவிட கடந்த 02ஆம் திகதி முல்லைத்தீவுக்கு வருகைதந்த மீன்பிடி அமைச்சர் பல்வேறு முடிவுகளை எடுத்தபோதும் இதுவரை எந்த தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் குற்றம் சாட்டினர்.

மேலும், கடலட்டை தொழில் காரணமாக தாம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அத்தொழிலானது 13 மைல் தூரத்துக்கு மேல்தான் செய்யமுடியும் எனவும் ஆனால் முல்லைத்தீவைப் பொறுத்தவரை 13 மைல்களுக்கு அப்பால் ஆழ்கடலெனவும் இந்த தொழிலை செய்யமுடியாது எனவும் ஆனால் இந்த அனுமதியை பெறுபவர்கள் இந்த தொழிலை இரண்டு மூன்று கிலோமீட்டருக்குள் செய்வதனால் தமது தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, இந்த தொழிலை முற்றாக தடைசெய்யுமாறும் கோரப்பட்டது.

இதனைவிட முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைவலைப்பாடுகளில் வெளிமாவட்டத்தவர்களின் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் இராணுவம் கடற்ப்படை பொலிஸாரின் உதவியுடன் எமது தொழிலை முற்றுமுழுதாக மடக்கி சிங்களவர்களுக்கு ஆதரவுவழங்கிவருவதாகவும் தாம் இம்முறை தொழிலாளர் தினத்தை கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு துக்கதினமாக அனுஸ்டிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர் இதனைவிட இராணுவத்தினர் கடற்படையினர் தமது தொழிலிடங்களை கையகப்படுத்திவைத்திருப்பதாகவும் அவற்றை மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

குறைகளை கேட்டறிந்த சுமந்திரன், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து நாங்கள் ஒருநாள்முழுவதும் முல்லைத்தீவு மீனவர் பிரச்சினை சம்மந்தமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினைகளை எடுத்து கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .