2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பலகை அறுத்த பிக்கு உள்ளிட்ட மூவர் கைது

Kanagaraj   / 2016 மே 01 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். கோகுலன்

வெலிமடை திவுரும்பொல ரஜமகா விகாரையிலுள்ள பழமை வாய்ந்த அரச மரத்தை வெட்டி பலகைகளாக்கிய அவ்விகாரையின் விகாராதிபதி உட்பட மூவரை  வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராவணனால் இலங்காபுரிக்கு கடத்தி வரப்பட்ட சீதை, அயோத்திக்கு மீண்டும் செல்வதற்கு முன்பு தான் கற்புடன் இருப்பதை நிரூபிப்பதற்காக தீக்குளித்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.

இவ்வாறு சீதை தீ குளித்த இடமாக நம்பப்படுகின்ற இடமே இவ் 'திவுரும்பொல' விகாரையாகும். இவ்வாறு வரலாற்று சிறப்பு மிகு விகாரையிலுள்ள போதி மரத்தை வெட்டிய குற்றத்திற்காகவே இவ் விகாராதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பழைமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான போதி மரத்தை (அரச மரம்)  வெட்டிய பிக்குவை கைது செய்யுமாறு கோரி, பொதுமக்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த பிக்கு உட்பட மூவரை கடந்த வெள்ளிக்கிழமையன்று பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து மே மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வெலிமடை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
    
    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X