2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதி வேலைக்கு மணல் பெறுவதில் இடர்

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனில் மணல் அகழ்வுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதன் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீதி வேலைக்கு மணல் பெறுவதில் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக வீதி புனரமைப்பு ஒப்பந்தகாரர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 427 மில்லியன் ரூபாய் செலவில் கோணாவிலில் இருந்து அக்கராயன் பிள்ளையார் கோவில் வரையான ஆறு கிலோமீற்றர் வீதியும் அக்கராயன் மருத்துவமனைச் சந்தியிலிருந்து அணைக்கட்டு வீதி வழியாக ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் வரையான ஏழு கிலோமீற்றர் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அக்கராயன் பிரதேசத்தில் மணல் அகழ்வு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அனுமதியுடன் பெறப்பட்ட மணல் கூட தற்போது பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், வீதி புனரமைப்புகளை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் காணப்படுவதாகவும் இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீதி புனரமைப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தகாரர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எடுத்த முயற்சிகள் காரணமாக அக்கராயன் பொலிஸாரால் மணல் அகழ்வு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .