2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அக்கராயன் குளம் திறந்துவிடப்பட்டுள்ளது

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தின் நீர் சிறுபோக நெற்செய்கைக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தலைமையில் ஏப்ரல் 1ஆம் திகதி அக்கராயன்குளத்துக்கான சிறுபோக நெற்செய்கைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அக்கராயன் குளத்தின் கீழ் 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவெடுக்கப்படதற்கமைய, தற்போது குளத்தின் நீர் சிறுபோக நெற்செய்கைக்காக முழுமையாக திறந்துவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய பெரிய குளமான இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக, இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபோக நெற்செய்கையே இவ்வாண்டு காலபோக நெற்செய்கைக்கான விதைநெல்லின் தேவையை நிறைவுசெய்யவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .