2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'தொழிலாளர்களின் அபிலாஷைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தொழிலாளர்களின் அபிலாஷைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'நாட்டின் கொழும்பு, காலி போன்ற ஏனைய இடங்களில் நடைபெறுகின்ற கூட்டங்கள் பச்சை கொடியுடைய கூட்டம், நீலக்கொடியுடைய கூட்டம், சிவப்புக் கொடியுடைய கூட்டம் என்று கட்சிகளின் பலங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு கூட்டமாக இருக்கின்றதே தவிர ஒட்டுமொத்த தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கூட்டங்களாக அவை அமையவில்லை.

தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அக்கட்சியினுடைய பலத்தினை வெளிப்படுத்துவதற்காக அவர்களது தொழிலாளர் தின கூட்டத்தை நுவரெலியாவிலே நடத்துகின்றது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய மே தின கூட்டம் யாழ்ப்பாணத்திலே நடைபெறுகின்றது.

தொழிலாளர் தினமான இன்று எல்லா காட்சிகளும் தங்களுடைய கட்சி சார்ந்த விடயங்களை பேச முற்படுகின்ற இந்த நேரத்திலே தொழிலாளர்;களுடைய உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும், அவர்களுடைய அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே காத்தான்குடி முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் இந்த மே தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடத்திக்கொண்டிருக்கின்றது' என்றார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X