2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 02/05/2016

Princiya Dixci   / 2016 மே 02 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டபடி, பொருட்களை இஷ்டத்துக்கு வாங்கிக் குவித்தால் வீடே குப்பைக் காடாகிவிடும். 

மேலும், அதே பொருட்களைப் பாவிக்காமல் விடுவதால், காலப் போக்கில் அவை சேதமாகிவிடும். 

சின்ன இல்லங்களையும் விசாலம் போன்ற தோற்றத்தில் வைக்கலாம். பொருட்களைக் குவித்தும் அடுக்கிவைக்காமலும் இருந்தால், இல்லம் குறுகி, நடக்கவும் இயலாமல் தடுக்கிவிழும் சந்தர்ப்பங்களும் உருவாகலாம்.

எவ்வித தேவைகளுமின்றி வாங்கும் முறைகூட ஒரு மனநோய் போலதான் என எண்ண வேண்டியுள்ளது.

காசைக் கையில் வைத்திருக்க சிலருக்குப் பிடிப்பதில்லை. இத்தகையவர்கள், கையில் காசு இல்லை எனக் கவலையும் படுகிறார்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .