2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

காலாவதித் திகதியை அதிகரித்துக் காட்டிய ஐஸ் பக்கெட்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 மே 02 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு முரணான வகையில் காலாவதித் திகதியை அதிகரித்துக் காட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுவையூட்டிய சுமார் 2,000 ஐஸ் பக்கெட்டுகள் அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன. 

மேற்படி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (01) பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்ச் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது, சுவையூட்டிய ஐஸ் பக்கெட்டுகளை தயாரிக்கும் நிலையம் ஒன்றிலிருந்தே இந்த ஐஸ் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ் பக்கெட்டுகளில் உற்பத்தித் திகதியை ஜுன் மாதம் 25ஆம் திகதியாக இட்டு கூடிய காலம் வைத்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை தெரியவந்ததாக அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
மேற்படி நிலையத்தின் உரிமையாளர்  எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இவ்வாறு சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்  மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X