2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுதேசிய உணவு மற்றும் கலாச்சார கண்காட்சி

Princiya Dixci   / 2016 மே 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

கலாசார மற்றும் கலை அலுவல்கள் நிகழ்ச்சி திட்டத்துக்கு அமைவான சுதேசிய உணவு வகைகள் மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான கண்காட்சி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) காலை 09 மணிக்கு யாழ்.பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் பொ.தயானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் பாரம்பரிய உணவுகள், சிற்றுண்டிகள், பனை மற்றும் தென்னை உற்பத்திகள், சிறுதொழில் உற்பத்திகள், கலாசார மரபுரிமை பொருட்கள், கைப்பணிப்பொருட்கள், புராதன சின்னங்கள் தொல்லியற்சாதனங்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேற்படி பொருட்கள் தயாரிப்போர் அல்லது பாதுகாத்து வைத்திருப்போர் யாழ். பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.தமிழ்மாறனைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .