2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எகிப்துப் பொலிஸார் அதிரடி: ஊடகவியலாளர் இருவர் கைது

Shanmugan Murugavel   / 2016 மே 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் தலைநகரான கெய்ரோவில், அரசாங்கத்துக்கெதிரான ஊடகவியலாளர் குழுமமொன்றைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களை, அந்நாட்டின் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த குழுவின் அலுவலகத்துக்குள் அத்துமீறிப் புகுந்தே, இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஊடகத் தொழிலாளர் ஒன்றியத்தின் குறித்த கட்டடத்துக்குள், எகிப்துப் பொலிஸார் புகுந்தனர் என்ற குற்றச்சாட்டை மறுத்த எகிப்து உள்விவகார அமைச்சு, எனினும் அந்தக் குழுவைச் சேர்ந்த இருவரைக் கைதுசெய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

எகிப்தின் தீவுகள் இரண்டை, சவூதி அரேபியாவுக்கு வழங்குவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி அப்டெல் பட்டா சிசி எடுத்த முடிவைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி, ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அரசாங்கத்துக்கெதிரான கருத்துகளை ஒடுக்குவதில், அந்நாட்டு அரசாங்கம், அதிக கவனத்தைச் செலுத்திவருகிறது.

இந்நிலையிலேயே, எதிரணியின் இணையத்தளத்தின் ஆசிரியரும் இன்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஊடகவியலாளர்களின் அக்கூட்டணி, ஆகக்குறைந்தது, உள்விவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதோடு, மன்னிப்புக் கோருதலும் இடம்பெற வேண்டுமெனக் கோரியுள்ளது.

குறித்த கட்டடத்துக்குள், 50 அதிகாரிகள் உட்புகுந்தே இந்தக் கைதை மேற்கொண்டதாக, ஊடகவியலாளர் கூட்டணி தெரிவித்த போதிலும், அதை மறுத்த உள்விவகார அமைச்சு, நான்கு அல்லது ஐந்து அதிகாரிகளே இக்கைதை மேற்கொண்டதாகத் தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .