2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'உரிமைகளை மறுக்கும் தலைமைகளை மலையக மக்கள் நிராகரிக்க வேண்டும்'

Sudharshini   / 2016 மே 02 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சலுகைகளை வழங்கி தங்களின் அரசியல் உரிமைகளை மறுக்கும் தலைமைகளை என்று மலையக மக்கள் நிராகரிக்கின்றார்களோ? அன்றுதான் மலையகத்தில் மாற்று அரசியலுக்கான பாதை விரிவடையும்' என சமூக சீராக்கல் இயக்கத்தின் அழைப்பாளர் கா.கமலதாசன் தெரிவித்தார்.

'பிரித்தானியர் காலந்தொட்டு இன்றுவரை மலையக மக்கள், பலருக்கு நல்ல மூலதனமாகியுள்ளனர். சமகாலத்தில் அரசியல் தலைவர்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கும்  மூலதனமாகியுள்ளனர்.

மலையக மக்கள் யாருக்கும் மூலதனமாவதை நிறுத்தி, அரசியல் மாற்றத்துக்கான  மூலதனமாக தம்மை மாற்ற வேண்டும்' என அவர் இதன்போது வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .