2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மனிதர்களுக்கு மற்றொரு பூமி

Gavitha   / 2016 மே 03 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமியைப் போன்று மனிதர்கள் வாழக் கூடிய 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளியில் காணப்படும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அவ்வப்போது புதிய கிரகங்களை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பூமியைப் போன்று மனிதர்கள் வாழக் கூடிய 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. நமது சூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே இந்த 3 கோள்கள் தான் மிகச் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கிரகங்கள் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் இவை அளவிலும் வெப்ப நிலையிலும் பூமி மற்றும் வெள்ளி போன்று உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே உயிர்வாழ்வதற்கான இரசாயன தடயங்களை கண்டுபிடிக்க இது முதல் வாய்ப்பு என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .